×

காதலனுடன் தங்கையை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய அண்ணன்

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த தம்பதிக்கு 16 வயது மகனும், எட்டாம் வகுப்பு படித்து வரும் 14 வயது மகளும் உள்ளனர். மகன் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மற்றொரு 16 வயது சிறுவன் 14 வயது சிறுமியின் அண்ணனுக்கு நண்பன் ஆனார். இவர் திருப்பூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கும், அண்ணனின் நண்பனுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர்.

இது சிறுமியின் அண்ணனுக்கு தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை மிரட்டிய நண்பர்கள் இருவரும் மது அருந்திவிட்டு அடிக்கடி தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். பெற்றோர் வீட்டில் இல்லாத சமயங்களில் தங்கையிடம் வீட்டிலேயே அண்ணனும் தகாத முறையில் பலமுறை நடந்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பம் ஆனார். சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கண்ட பெற்றோர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது அண்ணனும், நண்பனும்தான் காரணம் என கூறியுள்ளார். இதுபற்றி மருத்துவமனை தரப்பில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, சிறுவர்கள் இருவரையும் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து, திருப்பூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் 2 சிறுவர்களும் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி, தேவையான மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னர் மகளிர் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

The post காதலனுடன் தங்கையை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய அண்ணன் appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,Tarapuram, Tirupur district ,
× RELATED தாராபுரத்தில் கூடைப்பந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு டிஎஸ்பி பரிசு