×

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைதான கோயில் பூசாரி ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: தனக்கு எதிராக புகாரளித்த பெண்ணுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டுமென சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவில், தனக்கும், புகாரளித்த பெண்ணுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதால் தனக்கு ஜாமீன் வழங்க அவர் ஆட்சேபம் தெரிவிக்கப் போவதில்லை. இது தொடர்பாக புகார் அளித்த பெண் சார்பில் உறுதி அளிக்கப்பட்டு மெமோ தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதற்கிடையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்திக் முனுசாமி தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்திக் முனுசாமி கைது செய்யப்பட்டு விட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டதால் அவரது முன் ஜாமீன் மனு செல்லாததாகி விட்டது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைதான கோயில் பூசாரி ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kalikampal ,Karthik Munusamy ,Chennai District Principal Sessions Court ,
× RELATED காளிகாம்பாள் கோயில் அர்ச்சகருக்கு ஜாமின்!!