×

ஓட்டுனரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கைகோரி தஞ்சாவூரில் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்

 

தஞ்சாவூர், மே 30:தஞ்சாவூர் பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து இ.பி.காலனிக்கு ஷேர் ஆட்டோவை புஷ்பராஜ் (24) என்பவர் ஓட்டிச் சென்றார். நாஞ்சிக்கோட்டை சாலை முனியாண்டவர் காலனி அருகே சென்றபோது குடிபோதையில் 4 இளைஞர்கள் ஷேர் ஆட்டோவை மறித்துள்ளனர். ஆட்டோவில் பயணிகள் அமர இருக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் புஷ்பராஜை ஷேர் ஆட்டோவிலிருந்து வெளியே இழுத்து கடுமையாக தாக்கி உள்ளனர்.

காயமடைந்த புஷ்பராஜ் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புஷ்பராஜ் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சாவூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் தஞ்சாவூர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் புஷ்பராஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வல்லம் மற்றும் நாஞ்சிக்கோட்டை சாலையில் இயக்கப்படும் 52 ஷேர் ஆட்டோக்களையும் இயக்காமல் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

 

The post ஓட்டுனரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கைகோரி தஞ்சாவூரில் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Auto Drivers Owners Association ,Thanjavur ,Pushparaj ,EP Colony ,Nanchikottai Road ,Muniyandavar Colony ,Dinakaran ,
× RELATED முன்னாள் படைவீரர்கள் குறைதீர் முகாம்