லக்னோ: உ.பி முழுவதும் எனது தொகுதியாகத்தான் கருதுகிறேன். இருந்தாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டிடுவது குறித்து பாஜ மேலிடம் தான் முடிவெடுக்கும் என்று உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். உ.பி. மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பாஜ, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரத்யேக டே்டியில் கூறியிருப்பதாவது: ‘ சிவப்பு தொப்பி ரெட் அலர்ட் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். சமாஜ்வாடி ஆட்சியில் நடந்த குற்றங்கள், அராஜகங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பிரதமர் அவ்வாறு கூறினார். சமாஜ்வாடி கட்சி வம்ச அரசியலையும், ஜாதி அரசியலையும் ஊக்குவிக்கிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும். உ.பியில் அனைத்தும் எனது தொகுதியாகத்தான் கருதுகிறேன். அடுத்த தேர்தலில் பாஜ 325 கிடைக்கும். அதற்கு மேல் வெற்றி பெற உழைக்க வேண்டும்.’ இவ்வாறு அவர் கூறினார்….
The post உ.பி. முழுவதும் எனது தொகுதி: தேர்தலில் போட்டியிடுவதை பாஜ மேலிடம் முடிவெடுக்கும்: முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி appeared first on Dinakaran.
