×

பக்தரிடம் ஆன்லைனில் ரூ17 ஆயிரம் அபேஸ்; திருப்பதி விஐபி தரிசன டிக்கெட் போலியாக வழங்கி மோசடி: புரோக்கருக்கு போலீஸ் வலை


திருமலை: விசாகப்பட்டினத்தை சேர்ந்த சீனிவாஸ் என்பவர் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெறுவதற்காக தனது நண்பரின் மூலம் திருப்பதியை சேர்ந்த ரகு சாய் தேஜா என்ற புரோக்கரை தொடர்பு கொண்டு 4 வி.ஐ.பி தரிசன டிக்கெட் வேண்டுமென தெரிவித்தார். இதற்கு ரகு சாய் தேஜா தான் லட்டு கவுண்டரில் வேலை செய்வதாகவும், வி.ஐ.பி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி கடந்த 26ம் தேதி போன்பே மூலம் ஸ்ரீனிவாசிடமிருந்து ரூ17 ஆயிரத்தை பெற்றுக் கொண்டார். பின்னர் பழைய வி.ஐ.பி பிரேக் தரிசன டிக்கெட்டை ஸ்கேன் செய்து பெயர், தேதிகளை மாற்றி போலி டிக்கெட் தயார் செய்தார்.

அதை வாட்ஸ் அப் மூலம் ஸ்ரீனிவாசிற்கு அனுப்பினார். அந்த டிக்கெட்டை எடுத்துக் கொண்டு நேற்று சீனிவாஸ் சுவாமி தரிசனம் செய்ய சென்றார். தேவஸ்தான ஊழியர்கள் ஸ்ரீனிவாஸ் கொண்டு சென்ற டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்தபோது ஸ்கேன் ஆகவில்லை. இதனால் தேவஸ்தான ஊழியர்கள் போலி தரிசன டிக்கெட் என ஸ்ரீனிவாசை திருப்பி அனுப்பினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலி டிக்கெட் கொடுத்த ரகுசாய் தேஜாவை தேடி வருகின்றனர்.

The post பக்தரிடம் ஆன்லைனில் ரூ17 ஆயிரம் அபேஸ்; திருப்பதி விஐபி தரிசன டிக்கெட் போலியாக வழங்கி மோசடி: புரோக்கருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Sinivas ,Visakhapatnam ,Raghu Sai Teja ,Raghu Sai ,
× RELATED திருப்பதி வரும் பக்தர்களுக்கு தரமான...