×

1,250 டன் ரேஷன் அரிசி காட்பாடி வருகை

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக 1,250 டன் ரேஷன் அரிசி ரயிலில் இன்று காட்பாடிக்கு வந்தடைந்தது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ரஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு விநியோகிக்கும் வகையில் 1,250 டன் ரேஷன் அரிசி தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து இன்று காலை காட்பாடிக்கு ரயிலில் வந்தடைந்தது. இங்கிருந்து லாரிகள் மூலம் பாகாயம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கிருந்து லாரிகள் மூலம் தாலுகா வாரியாக உள்ள ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும் என்று பொது வினியோகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் வேலூர் மாவட்ட ரேஷன் கடைகளுக்கான இம்மாதத்துக்கான பாமாயிலும் தாமதமாக வந்த நிலையில் அவற்றை பெற்றுக் கொள்ளும் காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

The post 1,250 டன் ரேஷன் அரிசி காட்பாடி வருகை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Katpadi ,Vellore district ,Kodpadi ,Dinakaran ,
× RELATED சார் பதிவாளர் அலுவலகத்தில்...