×

விடுமுறை நாட்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்து 31-ம் தேதி 500 பேருந்துகளும், 1-ம் தேதி 570 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டிலிருந்து 31, 1-ம் தேதிகளில் நாகை, ஒசூர், பெங்களூருவுக்கு 130 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

 

The post விடுமுறை நாட்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Department of Transport ,Chennai ,Special Government Transport Corporation ,Muhurtham ,Vandalur Klambakak ,Thiruvannamalai ,Trichy ,Kumbakonam ,Madurai ,Nella ,
× RELATED பக்ரீத் விடுமுறை எதிரொலி.! வெளிமாநில...