×

வேர்க்கடலை பேடா

தேவையான பொருட்கள்

1 கப் வறுக்காத வேர்க்கடலை
1/4 கப் பால் பவுடர்
1/2 கப் சர்க்கரை
1/4 கப் தண்ணீர்
1 ஸ்பூன் நெய்
சிறிதளவு ரெட் புட் கலர்.

செய்முறை

முதலில் வேர்க்கடலையை லேசாக கடாயில் நிறம் மாறாமல் வறுத்துக் கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையை ஆறவிட்டு அதன் தோலை நீக்கிக் கொள்ளவும். அதன்பின், வேர்க்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த வேர்க்கடலையை நன்றாக சலித்துக் கொள்ளவும். அதனுடன் பால் பவுடரையும் சேர்த்து கலந்து வைக்கவும். ஒரு கடாயில் சர்க்கரை மற்றும் தண்ணீரை சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். நல்ல பதமாக சர்க்கரை காய்ச்சி வந்ததும் நாம் பொடி செய்து வைத்துள்ள வேர்க்கடலையை அதனுடன் சேர்த்து நன்றாக கலந்து லேசாக சுருண்டு வரவேண்டும். அதிகமாக சுருண்டு வந்தால் ஆறிய உடன் உதிர்ந்துவிடும். உருட்டுவதற்கு வராது. சரியான பதமா என்று தெரிந்து கொள்வதற்கு ஒரு சிறிய தட்டில் கொஞ்சம் எடுத்துப் போட்டு கையில் உருட்டினால் உருட்ட வரவேண்டும். அதுதான் பதம். இறுதியாக நெய் சேர்த்து ஒரு தடவை கலந்து நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும். லேசாக சூடு இருக்கும்போது அதை நன்றாக பிசைந்து கொள்ளவும். அப்பொழுதுதான் மிகவும் மிருதுவாக இருக்கும். இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள பேடாவை உருண்டைகளாக உருட்டி நடுவில் லேசாக அமுக்கினால் பள்ளமாக இருக்கும். அதில் ஒரு கிராம்பை வைத்தால் பார்ப்பதற்கு ஆப்பிளின் காம்பு போலிருக்கும். இப்போது சுவையான இனிப்பான வேர்க்கடலை பேடா தயார்.

The post வேர்க்கடலை பேடா appeared first on Dinakaran.

Tags :
× RELATED செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்