×

கோயில் சொத்துகளை வைத்திருப்பவர்கள் அடுத்தபிறவியில் வவ்வால், பெருச்சாளியாக பிறப்பார்கள்: மதுரை ஆதீனம் பரபரப்பு பேச்சு

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், தஞ்சாக்கூரில் உள்ள ஜெகதீஸ்வரர், திரிபுரசுந்தரி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த சுவாமிகள் பேசுகையில், ‘‘‘‘ தேசியக் கொடியின் நிறம் நமது சமயத்தில் உள்ளது. பச்சையானது அம்பாளை குறிக்கும், சிகப்பானது செம்மேனியான் சிவனை குறிக்கும், வெள்ளை ரிஷபத்தை குறிக்கும். யாராவது கோயில் நிலத்தை வைத்திருந்தீர்கள் என்றால் கொடுத்து விடுங்கள். குத்தகைத் தொகை கொடுக்காமல் இருந்தாலும் கொடுத்து விடுங்கள். இல்லையென்றால் அடுத்த பிறவியில் வவ்வாலாக பிறப்பார்கள். பெருச்சாளியாக பிறப்பார்கள்.  மூஞ்சூறாக பிறப்பார்கள். சிவன் சொத்து குல நாசம் என்பதால் கோயில் சொத்துக்களை திருப்பி கொடுத்து விடுங்கள்’’’’ என்று பேசினார்….

The post கோயில் சொத்துகளை வைத்திருப்பவர்கள் அடுத்தபிறவியில் வவ்வால், பெருச்சாளியாக பிறப்பார்கள்: மதுரை ஆதீனம் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Vaval ,Madurai Adenam ,Manamadurai ,Tripurasundri ,Temple Kumbabishekam ,Jegatieswarar, Sivagangai District, Thanjakur ,Gyanasambanna ,Vawha ,Madurai ,
× RELATED 15 வயது மகள் காதல் கண்டித்த தந்தை கொலை: காதலன், நண்பர் கைது