×

‘ரீல்ஸ்’-யில் மூழ்கிய மனைவி குழந்தையுடன் மாயம்: போலீசில் புகாரளித்த கணவர் தவிப்பு

பாட்னா: பீகாரைச் சேர்ந்த ஜிதேந்திரா – தமன்னா பர்வீன் தம்பதியினர் கடந்த 2017ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். திருமண வாழ்க்கை பல ஆண்டுகளாக நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில், பணி நிமித்தமாக ஜிதேந்திரா பெங்களூரு சென்றார். இதைத் தொடர்ந்து, தமன்னா சமூக ஊடகங்களுக்கு அடிமையாகத் தொடங்கினார். அவ்வப்போது ‘ரீல்ஸ்’ வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தனது மனைவியின் நடவடிக்கை ஜிதேந்திராவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எப்போதும் ரீல்ஸ்களில் மூழ்கியிருக்கும் தமன்னா, தனது கணவர் மற்றும் மகளை கவனிக்கவில்லை.

எப்போதும் ஆன்லைனிலேயே மூழ்கி இருக்கும் தனது மனைவியின் நடத்தை அவரது கணவருக்கு பிடிக்கவில்லை. மேலும் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருக்குமாறும் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடைசியில் தமன்னா, தனது மகளை தூக்கிக் கொண்டு யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து தற்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதை கண்டித்ததால், மனைவி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ‘ரீல்ஸ்’-யில் மூழ்கிய மனைவி குழந்தையுடன் மாயம்: போலீசில் புகாரளித்த கணவர் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Patna ,Jitendra ,Tamanna Parveen ,Bihar ,Bengaluru ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 2...