×

அரைவேக்காடு அண்ணாமலையுடன் எப்படி விவாதிப்பது?: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேச பேட்டி

மீனம்பாக்கம்: கரசேவைக்கு ஆள் அனுப்ப ஜெயலலிதா சொன்னார் என்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு நான் விலக தயாராக இருக்கிறேன். மேலும் அரைவேக்காடு அண்ணாமலையுடன் எப்படி விவாதிப்பது? என சென்னை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று இரவு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாஜக தலைவரான அண்ணாமலை எதற்கும் லாய்க்கில்லாதவர். மெச்சூரிட்டி இல்லாதவர்.

அன் மெச்சூரிட்டி நபர். பக்குவப்படாத அரசியல்வாதி அண்ணாமலைதான். சுட வச்ச பாலை குடித்தவுடன் நாக்கு சுட்டதும், மோரை பார்த்தாகூட ஊதி ஊதி குடிப்பான், அதுபோல அண்ணாமலைக்கு எவ்வளவு தான் திருப்பி அடித்தாலும், எவ்வளவு அடித்தாலும் வாங்கிக்கொள்கிறார் என்பதுபோல் அண்ணாமலை போக்கு காட்டி வருகிறார். அண்ணாமலைக்கு சூடு, சொரணை, மானம் இருக்கனும். அண்ணாமலையின் கருத்து தமிழ்நாடு மக்கள் அல்லாமல், உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. ஜெயலலிதா தன்னுடைய ஆட்சிக்காலத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பிற சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அத்தனை பேருக்கும், ஒருமத நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய அளவிற்கு, நல்ல சூழ்நிலையை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி காட்டியவர்.

ஜெயலலிதாவை ஒரு மதத்துக்குள் அடக்கும் வகையில் இழிவான செயலை செய்து வருகிறார். அண்ணாமலை அரசியல் வியாபாரி. ஒரு ஆளுநராக இருந்த தமிழிசை தவறான தகவலை கூறலாமா? கர சேவைக்கு ஆட்களை அனுப்பினார் ஜெயலலிதா என கூறுகிறார். பொறுப்பற்ற முறையில் பேசுவது, முகம் சுளிக்கும் வகையில் இருக்கிறது. கரசேவைக்கு ஆள் அனுப்ப ஜெயலலிதா சொன்னார் என்பதை நிரூபித்தால், அரசியலை விட்டு நான் விலக தயாராக இருக்கிறேன்.

ராமர் கோயில் கட்டவேண்டும், மசூதியும் இருக்கவேண்டும் என்றுதான் ஜெயலலிதா விரும்பினார். தோல்வியின் உச்சக்கட்டத்தை நோக்கி பாஜக சென்றுகொண்டிருக்கிறது. மேலே இருப்பவர்களும் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள், கீழே இருப்பவர்களும் அப்படி பேசிக்கொண்டிருக்கிறார்கள். பாஜகவில் தலைவர்கள் இல்லையா? பாஜகவை வளர்க்க கஷ்டப்பட்டவர்கள் அத்வானி, வாஜ்பாய். அவர்களை பற்றி ஏன் பேச மறுக்கிறார் அண்ணாமலை. அதிமுக பற்றி பேசவேண்டும், அதிமுகவினரிடம் வாங்கி கட்டிக்கவேண்டும் என பேசி வருகிறார். தெய்வ பற்று இருப்பதால் நீங்கள் எல்லோரும் மதவாதிகளா? தெய்வ பக்தி ஜெயலலிதாவுக்கும் இருந்தது. மதபிரிவினை கிடையாது. இந்த அடிப்படை விஷயம்கூட தெரியாத அரை வேக்காடுதான் அண்ணாமலை.

ண்ணாமலை முன்பு எந்த காரில் வந்தார்? இன்று எந்த காரில் போகிறார். உழைத்து சம்பாதிக்காத அனைத்தும் ஊழலின் உருவமாக உள்ளது. பாஜக மக்களை ஏமாற்றியுள்ளது. அரைவேக்காடுடன் நாங்கள் விவாதம் செய்யவேண்டுமா? அரசியல்வாதியோடு விவாதிக்கலாம். அரசியல் வியாபாரியிடம் விவாதிக்க தயாராக இல்லை. தமிழ்நாட்டில் பாஜகவை பெரிய கட்சியாக கருதவில்லை. அண்ணாமலைக்கு வேறு வழி இல்லை. எங்கள் தலைவர்கள் பற்றி பேசி, வாங்கி கட்டி கொள்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

The post அரைவேக்காடு அண்ணாமலையுடன் எப்படி விவாதிப்பது?: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேச பேட்டி appeared first on Dinakaran.

Tags : Arivekkadu ,Annamalai ,AIADMK ,minister ,Jayakumar ,Meenambakkam ,Jayalalithaa ,Karaseva ,Chennai airport ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம்:...