×

நீலகிரி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று நள்ளிரவில் யானை கூட்டத்திலிருந்த குட்டி யானை ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் இன்று காலை 8 மணி அளவில் சம்பவ இடத்தை பார்வையிட்டு கிணற்றுக்குள் இருக்கும் குட்டி யானையை மீட்க நடவடிக்கை எடுத்து வந்தனர். 3 மணி நேரத்துக்கும் மேலாக ஒரு பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் குட்டி யானையை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. அது முடியாமல் போனதால் இரண்டாவதாக இன்னொரு பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டு தற்போது கிணற்றைச் சுற்றி மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

கிணற்றுக்குள் சிக்கியுள்ள குட்டி யானை வெளியில் வர வழிதெரியாமல் தத்தளித்து வரும் நிலையில், ஆக்ரோஷம் அடைந்த தாய் யானை குட்டி யானையைத் தேடி கிணற்றின் அருகே வந்துவிடாமல் இருக்க வனத்துறையினர் தாய் யானை உள்ளிட்ட மற்ற யானைகளை தனிக் குழுவாக நின்று கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்கப்பட்டது. சண்முகநாதன் என்பவர் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த யானை 8 மணி நேரத்துக்கு பிறகு மீட்கப்பட்டது. ஜேசிபி இயந்திரங்களுடன் யானை குட்டியை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

The post நீலகிரி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kerinci Nagar ,Nilgiri ,Kolapalli Kartenji Nagar ,Neelgiri district ,Bhandalur Kartanji Nagar ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED நீலகிரி கொளப்பள்ளி குறிஞ்சி நகர்...