×

‘அரசியல் கேள்வியை கேட்க வேண்டாம்’: பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: இமயமலை செல்லும் நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்கள் எழுப்பிய அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் வேட்டையன் படப்பிடிப்பு முடிந்தவுடன் 10 நாள் ஓய்விற்காக அபுதாபி சென்றிருந்தார். பின்னர், ஓய்வை முடித்துக்கொண்டு நேற்றைய தினம் சென்னை திரும்பிய அவர் கூலி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், ரஜினிகாந்த் இமயமலை செல்ல உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, அங்கு செல்வதற்காக போயஸ் கார்டனில் இருந்து விமான நிலையம் புறப்பட்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஒவ்வொரு ஆண்டும் இமயமலை செல்கிறேன், இந்த வருடமும் அங்கு செல்வது மகிழ்ச்சி.

அங்கு பத்ரிநாத், கேதார்நாத் செல்ல உள்ளேன்” என்றார். அப்பொழுது அவரிடம் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வருவாரா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு ரஜினி “வேணாம் அரசியல் கேள்வியை கேட்க வேண்டாம்” என தெரிவித்தார். மேலும், இசையா? பாடலா? என்ற கேள்விக்கு செய்தியாளரை “அண்ணா… NO Comments” என்று கூறிவிட்டு சென்றார். வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக நடக்கவிருக்கும் புதிய திரைப்படம் கூலி. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். தங்கக் கடத்தல் பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ரஜினி இமயமலை சென்று சென்னை திரும்பியதும் ஜூன் மாதம் இறுதியில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ‘அரசியல் கேள்வியை கேட்க வேண்டாம்’: பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த நடிகர் ரஜினிகாந்த் appeared first on Dinakaran.

Tags : Rajinikanth ,PM Modi ,Chennai ,Himalayas ,Abu Dhabi ,
× RELATED குவைத் தீ விபத்தில்...