×

புலியூர் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து

*பொதுமக்கள் பீதி

போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டம் புலியூரில் இருந்து, ஊத்தங்கரை செல்லும் மெயின் ரோடு பகுதியில் மின்சார வழித்தடம் செல்கிறது. கடந்த சில மாதங்கள் மின்கம்பங்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து, கட்டு கம்பிகள் வெளியே தெரிந்தபடி எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. மேலும் புலியூரில் இருந்து மாவுத்தூர் வழியாக ஊத்தங்கரை, மேல்மருத்தூர், போச்சம்பள்ளி, தர்மபுரி கல்லாவி உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியார் மற்றும் அரசு வாகனங்கள் சென்று வருகிறது அத்துடன் பள்ளி வாகனங்களும் சென்று வருகிறது. இந்நிலையில் அவ்வழியாக செல்லும் சில மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது.

இதனால் அவ்வழியாக செல்லும் லாரிகள், குச்சியினை பயன்படுத்தி மின் கம்பிகளை தூக்கிபிடித்து, பின்னர் கடந்து செல்கின்றன. புதிதாக வருபவர்கள் மற்றும் இரவு நேரத்தில் வரும் வாகனங்களுக்கு மின்கம்பி தாழ்வாக செல்வது தெரியாத நிலை உள்ளது. இதனால்.

மின்கம்பியில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அப்பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில், கடந்த ஓராண்டுக்கு மேலாக மின் கம்பங்களில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து எலும்பு கூடுபோல் காட்சியளிக்கிறது. மழையின் போது சூறைக்காற்று வீசினால் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பழுதான மின் கம்பங்களை மாற்றி, தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post புலியூர் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து appeared first on Dinakaran.

Tags : Puliyur ,Pochampalli ,Krishnagiri district ,Uthangarai ,Dinakaran ,
× RELATED விபத்தில் இறந்த தந்தையின் இன்சூரன்ஸ்...