×

சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் பாரம்பரிய முறைப்படி இயற்கை முறையில் பழுக்க வைத்த வாழை, மாம்பழங்கள் விற்பனை

*பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்

சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் பகுதியில் கணேச மூர்த்தி என்பவர் பழமுதிர்ச்சோலை நாராயணசாமி பழக்கடை என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் இயற்கையான முறையில் பாரம்பரிய முறைப்படி மாம்பழம், வாழைப்பழங்களை பூமியில் பள்ளம் தோண்டி அதில் வாழை இலை காய்ந்த சருகுகளை போட்டு வாழைத்தார்களை அடுக்கி பின்பு மூடி மண் கலயம் வைத்து புகையை உள்ளே செலுத்தி ஒரு நாள் கழித்து கொடாப்பை பிரித்து அதில் வைத்த பழங்கள் பழுத்த நிலையில் எடுத்து விற்பனை செய்து வருகிறார். இவரது கடையில் இயற்கையான முறையில் பழுக்க வைத்த பூவன், ரஸ்தாளி, செவ்வாழை கற்பூரவள்ளி மொந்தன் பச்சைபழம் நேந்திரம் ஏலக்கி, மலப்பழம் உள்ளிட்ட பழங்கள் எந்த நேரமும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இயற்கை முறையில் பழுக்க வைத்த வாழைப்பழங்கள், மாம்பழங்கள் என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றன பல்வேறு இடங்களில் கடந்த சில ஆண்டுகளாக மாம்பழங்கள் வாழைப்பழங்கள் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படுவதால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயங்கள் இருந்து வரும் நிலையில் கணேசமூர்த்தி தனது கடுமையான உழைப்பால் இயற்கையான முறையில் வாழைப்பழங்கள் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வருவதால் பொதுமக்கள் அச்சமின்றி பழங்களை வாங்கி செல்கின்றன. இங்கு விற்பனை செய்யப்படும் பழங்களை வாங்கி சாப்பிடுவதால் எந்த தொந்தரவும் ஏற்படுவது இல்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களின் நலன் கருதி இயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யும் கணேசமூர்த்தி போன்றோரை அரசும் சமூக ஆர்வலர்களும் பாராட்டியே தீர வேண்டும் இயற்கையை நேசிப்பது போல் இயற்கையாக பழுக்க வைத்த பழங்களை வாங்கி சாப்பிட்டு உடல் நலத்தை பாதுகாக்கலாம் அனைவரும் இயற்கையான முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய முயற்சி செய்தால் அனைவருக்கும் நன்மை உண்டாகும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

The post சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் பாரம்பரிய முறைப்படி இயற்கை முறையில் பழுக்க வைத்த வாழை, மாம்பழங்கள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chattanathpuram ,Sirkazhi ,Ganesa Murthy ,Palamuthircholai Narayanasamy Bekadai ,Mayiladuthurai district ,
× RELATED சீர்காழியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு மேடைப்பேச்சு பயிற்சி