×

கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயன்றதாக ராஜா என்பவர் அடித்துக் கொலை: காவலாளிகள் உட்பட 15 பேர் கைது!

கோவை: கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயன்ற ராஜா என்ற நபர், மருத்துவமனை காவலாளிகளால் அடித்துக் கொலை செய்தனர். இதில் காவலாளிகள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்குள் புகுந்து கம்பிகளைத் திருட முயன்ற ராஜாவை, மருத்துவமனை காவலாளிகள் சரமாரியாகத் தாக்கிய நிலையில், அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து ராஜாவுக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சிகிச்சைக்காக சென்ற தனது கணவரை திருட வந்ததாக தவறாக நினைத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் தாக்கி கொன்றுவிட்டதாக ராஜாவின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ராஜாவின் மனைவி அளித்த புகாரின் பேரில் கே.எம்.சி.எச். மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன் உள்பட ஊழியர்கள் 15 பேரை பீளமேடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயன்றதாக ராஜா என்பவர் அடித்துக் கொலை: காவலாளிகள் உட்பட 15 பேர் கைது! appeared first on Dinakaran.

Tags : Raja ,Goa ,KOWAI ,
× RELATED கனமழை காரணமாக கோவை குற்றால அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்!!