×

அக்னி வீர வாயு தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 

கோவை, மே 29: அக்னி வீர வாயு (இசைக்கலைஞர்) தேர்வுக்கு தகுதி வாய்ந்த இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்னி வீர வாயு (இசைக்கலைஞர்) தேர்வுக்கு பெங்களூரில் அமைந்துள்ள 7-வது ஏர் மேன் தேர்வு மையத்தில் வரும் ஜூலை 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஆட்சேர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது.

இதில் விண்ணபிக்கும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் 2004 ஜனவரி 2ம் தேதி மற்றும் 2007 ஜூலை 2ம் தேதிகளில் இடையே பிறந்திருக்க வேண்டும். மேலும், 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவது ஒரு இசைக் கருவியை வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். வரும் ஜூன் 5ம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். எனவே கோவை மாவட்ட இளைஞர்கள் அதிகளவில் விண்ணப்பித்து பயணடைய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அக்னி வீர வாயு தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Agni ,Coimbatore ,Krantikumar Badi ,Bangalore ,
× RELATED வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு...