×

விருதுநகர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 6,27,823 பேருக்கு சிகிச்சை: கலெக்டர் தகவல்

 

விருதுநகர், மே 29: விருதுநகர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் மொத்தம் 6,27,823 நோயாளிகள் கண்டறிப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இல்லங்களுக்கே சென்று தொற்றா நோய்களான உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து மருந்துகள் வழங்குவதற்காக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டம் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு தேவையான பிசியோதெரபி (இயன்முறை சிகிச்சை) மற்றும் வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை, பல்வேறு பரிசோதனைகள் ஆகியவை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

The post விருதுநகர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 6,27,823 பேருக்கு சிகிச்சை: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar district ,Collector ,Jayaseelan ,Tamil Nadu ,
× RELATED விருதுநகர் மாவட்டத்தில் வெளிமாநில...