×

தொழிலாளி மீது இரும்பு பைப்பால் தாக்குதல்

 

பண்ருட்டி, மே 29: பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம் புதுகாலனி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (45), தொழிலாளி. அங்குசெட்டிப்பாளையம் பழைய காலனியை சேர்ந்தவர் செல்வம் (27). இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அங்குசெட்டிப்பாளையம் திருமண மண்டப அருகே பழனிவேல் சென்ற போது அவர் மீது உரசுவது போல செல்வம் சென்றதால் இதுதொடர்பாக பழனிவேல் தட்டிக்கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த செல்வம், அவரது ஆதரவாளர்கள் மணிமாறன், சத்தியகுமார், சாரங்கபாணி, செல்வகுமார் ஆகியோர் பழனிவேலை அசிங்கமாக திட்டி இரும்பு பைப்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் செல்வம், மணிமாறன், சத்தியகுமார், சாரங்கபாணி, செல்வகுமார் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து வலைவீசி தேடி வருகின்றனர்.

The post தொழிலாளி மீது இரும்பு பைப்பால் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : on ,Panruti ,Palanivel ,Anguchettipalayam Pudukalani ,Selvam ,Anguchettipalayam Old Colony ,Anguchettipalayam ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்...