×

குறுவை சாகுபடி தீவிரம்

 

காட்டுமன்னார்கோவில், மே. 29: காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பொழிவு மற்றும் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இருப்பதன் காரணமாக வீராணம் ஏரி பாசன விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். புத்தூர், நெடுஞ்சேரி, வடக்கு விருதாங்கநல்லூர், புதுவிளாகம் உள்ளிட்ட பகுதிகள் சுமார் 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு, நடவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த பல வருடங்களாகவே தண்ணீர் பற்றாக்குறையில் எங்கள் பகுதியில் குறுவை சாகுபடியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 3 வருடங்களாக வீராணம் ஏரியில் பெரும்பாலும் தண்ணீர் இருந்து வருகிறது. இதன் காரணமாக பாசன மதகு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்த காரணத்தால் எங்கள் பகுதிகளில் ஆழ்குழாய் மின் மோட்டார்கள் மூலம் சிக்கல் இன்றி தண்ணீர் பெற முடிகிறது. இருபோகம் விளைச்சல் சிறப்பானதாக அமைந்துள்ளதால் இம்முறை நெல் விவசாயம் லாபகரமாக இருக்கும், என்றனர்.

The post குறுவை சாகுபடி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kattumannarkovi ,Kattumannarkoil ,Veeranam Lake ,
× RELATED வீராணம் ஏரி இந்த ஆண்டில் முதன்முறையாக அதன் முழு கொள்ளவை எட்டியது