×

பட்டாபிராம் சுற்றுவட்டார பகுதிகளில் பால் பாக்கெட்டுகளை திருடும் கும்பல்

 

ஆவடி, மே 29: ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் மலர்விழி (58). இவர் பட்டாபிராம் காவல் நிலையம் அருகில் சுமார் 10 வருடத்திற்கும் மேலாக ஆவின் பால் நிலையம் வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடையில் தினந்தோறும் பால் பாக்கெட்டுகளை மொத்தமாக அதிகாலையில் பால் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வைத்துவிட்டுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் மலர்விழி கடையில் இருந்த பால் பாக்கெட்டுகள் குறைவாக இருந்ததால் சம்பந்தபட்ட நிறுவனத்திடம் அவர் விளக்கம் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து அருகில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதிகாலை வேளையில் பால் வேனில் வரும் மர்மநபர் ஒருவர் 50 பால் பாக்கெட்டுகளை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.

இதே போன்று பட்டாபிராம் பாபு நகர் பகுதியில் பால் வியாபாரம் செய்து வரும் ஸ்ரீகுமார் என்பவரின் கடையில் இருந்தும் வேனில் வந்த ஒரு மர்மநபர் 144 பால் பாக்கெட்டுகளை திருடிச் சென்றுள்ளார். இது மட்டுமின்றி திருநின்றவூர் சரவணன் என்பவருக்குச் சொந்தமான பால் நிலையத்தில் 120 பால் பாக்கெட்டுகளை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பட்டாபிராம் காவல் நிலையத்தில் சம்பந்தபட்ட நபர்கள் புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் பால் திருடர்களை தேடி வருகின்றனர்.

The post பட்டாபிராம் சுற்றுவட்டார பகுதிகளில் பால் பாக்கெட்டுகளை திருடும் கும்பல் appeared first on Dinakaran.

Tags : Pattabram ,Aavadi ,Malarvizhi ,Aavin Dairy ,Pattabram Police Station ,Dinakaran ,
× RELATED இன்ஸ்ெபக்டர்கள் 40 பேர் மாற்றம்