×

மனித உரிமை செல் அமைப்பு மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு

 

தஞ்சாவூர், மே 29:தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் மனித உரிமை செல் அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதனை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினர்களாக கடலூர் மாவட்ட சேர்மன் கண்ணன், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் சுகம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைப்பின் துணைத் தலைவர் ஆசாத் தாஸ், மாவட்ட பொதுச்செயலாளர் வள்ளிக்கொடி, அமைப்புச் செயலாளர் கவிதா, பொருளாளர் சுபாஷினி மற்றும் திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை மதுரை, நாகப்பட்டினம் மாவட்ட தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

The post மனித உரிமை செல் அமைப்பு மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Human Rights Cell Organization District Head Office ,Thanjavur ,Thanjavur District ,Head Office ,of Human Rights Cell ,Thanjavur Medical College Road ,Mayor ,Sun. Ramanathan ,Cuddalore ,Human Rights Cell Organization District ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்புவதாக...