×

பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

 

சேலம், மே 29: சேலம் மாநகரில் செவ்வாய்பேட்டை, முதல் அக்ரஹாரம், கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மத்திய மாசுகட்டுபாடுவாரிய அதிகாரிகள், மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் ஆகியோர் இணைந்து நேற்று சேலம் டவுன் முதல் அக்ரஹாரம், செவ்வாய்ப்பேட்டை பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்தனர்.

15 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த கடைகளுக்கு ₹5,500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த கடைகளில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோன்ற ஆய்வு தொடர்ந்து நடைபெறும். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

The post பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Sewwaipet ,First Agraharam ,Shop Street ,control ,Dinakaran ,
× RELATED கரும்பு விளைச்சல் பாதிப்பால் வெல்லம்...