×

540 மூட்டை மஞ்சள் 50 லட்சத்திற்கு விற்பனை

 

நாமகிரிப்பேட்டை, மே 29: நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருவது வழக்கம். அதன் படி, நேற்று நடைபெற்ற மஞ்சள் ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்கவும், அதேபோல ஆத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சளை வாங்க வியாபாரிகள் வந்திருந்தனர்.

இதில் விராலி 350 மூட்டையும், உருண்டை 150, பணங்காளி 40 மூட்டை என மொத்தம் 540 மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. விராலி ரகம் அதிகப்பட்சம் குவிண்டால் ₹19,419க்கும், குறைந்தபட்சம் 9,399க்கும், உருண்டை ரகம் குவிண்டால் அதிகப்பட்சம் ₹16,092கும், குறைந்தபட்சம் ₹9,419க்கும், பணங்காளி ரகம் குவிண்டால் அதிகபட்சம் ₹23,299க்கும், குறைந்த பட்சம் ₹6,689 வரை என மொத்தம் 540 மூட்டை மஞ்சள் ₹50 லட்சத்திற்கு விற்பனையானது.

The post 540 மூட்டை மஞ்சள் 50 லட்சத்திற்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Namakrippet ,Namakrippet Agricultural Producers' Sales Association ,Mullukurichi ,Metalla ,Mangalapuram ,Pudupatti ,Seerapalli ,
× RELATED அரசு பள்ளியில் ஆதார் பதிவு சிறப்பு முகாம்