×

அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு நிர்வாகிகள் கூட்டம்

சென்னை: சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆதிதிராவிடர் நலக்குழு மாநில இணைச் செயலாளர்கள் வி.பி.ராஜன், திப்பம்பட்டி ஆறுசாமி, புஷ்பராஜ், மருதூர் ராமலிங்கம், துணைச் செயலாளர்கள் மாரியப்பன் கென்னடி, தசரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிதிராவிடர் நலக்குழு மாநிலச் செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமை தாங்கி ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

இந்த கூட்டத்தில் வரும் ஜூன் 3ம் தேதி கலைஞரின் பிறந்தநாளை முதலமைச்சர் அறிவிப்புக்கு ஏற்றவாறு அனைத்து மாவட்டங்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டங்களை மாவட்டந்தோறும் சிறப்பாக நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் சமீபத்தில் மறைந்த திமுக நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

The post அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு நிர்வாகிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Dimuka Aditravidar Welfare Group ,Anna Vidyalaya ,Chennai ,Artist's Arena ,Anna Vidyalaya, Chennai ,Aditravidar Welfare Committee ,V. B. Rajan ,Thippampatty Arisami ,Pushbaraj ,Marathur Ramalingam ,Anna Vidyalaya Dimuka Aditravidar Welfare Group ,Dinakaran ,
× RELATED 40 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக...