×

பிரபல மலையாள டைரக்டர் ஒமர் லுலு மீது நடிகை பலாத்கார புகார்

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் பிரபல டைரக்டர்களில் ஒருவர் ஒமர் அப்துல் வஹாப் என்ற ஒமர் லுலு. ஹேப்பி வெட்டிங், சங்ஸ், ஒரு அடார் லவ், தமாக்கா, நல்ல சமயம் உள்பட படங்களை இயக்கியுள்ளார். பல படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள இவர், ஏராளமான இசை ஆல்பங்களையும் தயாரித்துள்ளார். இந்நிலையில் மலையாள இளம் நடிகை ஒருவர் இவர் மீது கொச்சி நெடும்பாசேரி போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பலமுறை ஒமர் லுலு தன்னை பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஒமர் லுலு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆனால் நடிகையின் இந்தப் புகாரை டைரக்டர் ஒமர் லுலு மறுத்துள்ளார். அவர் கூறுகையில், எனக்கும், அவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது உண்மை தான். இப்போது தொடர்பை நான் துண்டித்து விட்டேன். பணம் பறிக்க பொய் புகார் அளித்துள்ளார் என்றார்.

 

The post பிரபல மலையாள டைரக்டர் ஒமர் லுலு மீது நடிகை பலாத்கார புகார் appeared first on Dinakaran.

Tags : Omar Lulu ,Thiruvananthapuram ,Omar Abdul Wahab ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்