×

திரிணாமுல் அரசு ஓபிசிகளுக்கு துரோகம் செய்து விட்டது: பிரதமர் மோடி தாக்கு

பராசத்: மேற்குவங்கத்தின் 42 தொகுதிகளில் 32 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்து விட்டது. மீதமுள்ள 9 தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்குவங்கத்தின் பராசத் தொகுதியில் நேற்று நடந்த பாஜ பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது: மேற்குவங்க திரிணாமுல் அரசு சமரசம் மற்றும் வாக்கு வங்கி அரசியலுக்காக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பறித்து விட்டது.

மேற்குவங்கத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசு துரோகம் செய்து விட்டது. மேற்குவங்க அரசின் துரோகத்தை வௌிப்படுத்திய நீதிமன்ற தீர்ப்பை மம்தா பானர்ஜி எதிர்த்தார். இது பொய்களையும், துரோகத்தையும் வௌிப்படுத்துபவர்களை திரிணாமுல் கட்சிக்கு பிடிக்காது என்பதை காட்டுகிறது. நீதித்துறையை திரிணாமுல் எப்படி கேள்வி கேட்கிறது? ” என்றார்.

 

The post திரிணாமுல் அரசு ஓபிசிகளுக்கு துரோகம் செய்து விட்டது: பிரதமர் மோடி தாக்கு appeared first on Dinakaran.

Tags : Trinamool govt ,PM Modi ,West Bengal ,BJP ,Parasad ,Trinamul government ,OBCs ,Modi ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்க மாநிலத்தில் கஞ்ஜன்ஜங்கா...