×

மோடியின் தியான நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி தரக்கூடாது: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி தரக்கூடாது. தேவைப்பட்டால் நீதிமன்றத்தையும் அணுகுவோம் என்று தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உறுதி அளித்துள்ளார். கன்னியாகுமரியில் பிரதமர் மோடி 3 நாட்கள் தியானம் இருக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி தரக்கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நாளை மனு அளிக்கப்படும் என்று செல்வப்பெருந்தகை பேட்டி அளித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

The post மோடியின் தியான நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி தரக்கூடாது: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Modi ,Chennai ,Tamil Nadu ,Kang ,PM Modi ,Kanyakumari ,
× RELATED மாம்பழம் சின்னம் கோரி பாமக கடிதம்