×

அவகோடா பிரெட் பர்பி

தேவையான பொருட்கள்

1 அவகோடா
4 பிரெட்
1/3 கப் டெசிகெடட் கோகனட்
1/2 கப் சர்க்கரை
1/4 கப் காய்ச்சிய பால்
சிறிதளவு பாதாம், பிஸ்தா
தேவையான அளவு நெய்.

செய்முறை

முதலில் அவகோடாவை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, அடுப்பில் பாத்திரத்தில் நெய் விட்டுஅவகோடா அரைத்ததைச் சேர்த்து சிறிது நேரம் கிளறி விட்டு டெசிகெடட் கோகனட் சேர்த்து கலந்து விடவும். மிக்ஸியில் பிரெட் துண்டுகளை சேர்த்து அரைத்து எடுத்து இதில் சேர்த்து கலந்து விடவும். பிறகு பால் ஊற்றி கலந்து விட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும். தேவைப்படும்போது நெய் விட்டு கலந்து விடவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது ஒரு தட்டில் நெய் தடவி இதனை சேர்த்து சமன் செய்து கொள்ளவும். பிறகு இதன் மேல் நட்ஸ் கட் செய்து தூவி தேவையான வடிவில் கட் செய்து பரிமாறவும். அவ்வளவுதான் சூப்பரான சத்தான அவகேடோ பிரெட் பர்பி தயார்.

 

The post அவகோடா பிரெட் பர்பி appeared first on Dinakaran.

Tags :
× RELATED செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்