×

நொச்சிக்குப்பம் மீன் அங்காடி ஜூன் 2வது வாரத்தில் திறப்பு: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: நொச்சிக்குப்பம் மீன் அங்காடி ஜூன் 2வது வாரத்தில் திறக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள மீன் அங்காடியில் 366 கடைகள் அமைக்கப்படுகின்றன. மீன்கள் விற்பனை மற்றும் மீன்களை சுத்தம் செய்வற்கு தனித்தனியாக இடங்கள் உள்ளன.

தமிழ்நாடு அரசு மீனவா்கள் நலனிலும், அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரை நொச்சிக்குப்பம் லூப் சாலையில் மாநகராட்சி சாா்பில் ரூ.10 கோடி மதிப்பில் நவீன மீன் மாா்க்கெட் கட்டப்பட்டு வருகிறது. இந்த நவீன மீன் மாா்க்கெட்டில் 384 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன.

இதன் கட்டுமானப் பணி, கடந்தாண்டு நவம்பரில் துவங்கி நடந்து வருகிறது. இந்தக் கடைகளில் வந்து செல்லும் மக்களின் வசதிக்காக 60 நான்கு சக்கர வாகனங்களும், 155 இருசக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கு இட வசதி செய்யப்பட்டுள்ளது. மீன் கடைகளின் மேற்கூரை சிந்தடிக் சீட்டால் அமைக்கப்படுகிறது. இந்த கடைகள் ஒவ்வொன்றும், 6 அடி நீளம் மற்றும் 5 அடி அகலம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தனிப்பட்ட கடைக்கும் தண்ணீா் வசதியும், கழுவும் வசதியும் மின் வசதியும் செய்யப்படுகிறது. மேலும், கழிவுநீா் அகற்றும் வசதியும், கழிவறை மற்றும் குடிநீா் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது, 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள, 10 சதவீத பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், லூப் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு, மீன் அங்காடியை ஜூன் 2வது வாரத்தில் திறக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

 

The post நொச்சிக்குப்பம் மீன் அங்காடி ஜூன் 2வது வாரத்தில் திறப்பு: சென்னை மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Nochikuppam fish shop ,Chennai Corporation ,CHENNAI ,Nochikuppam ,Fish ,Market ,Chennai Municipal Corporation ,Dinakaran ,
× RELATED மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை...