×

வேலை கேட்டு வந்த பெண்ணிடம் அமைச்சர் பாலியல் தொல்லை: தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: வேலை கேட்டு வந்த பெண்ணிடம் பஞ்சாப் அமைச்சர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பஞ்சாப் மாநில ஆம்ஆத்மி அமைச்சரும், எம்எல்ஏவுமான பால்கர் சிங்கிடம் கடந்த சில நாட்களுக்கு முன் வேலை கேட்டு பெண் ஒருவர் சென்றுள்ளார். அந்த பெண்ணிடம் அமைச்சர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்படி, தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா வெளியிட்ட பதிவில், ‘பஞ்சாப் எம்எல்ஏவும், அமைச்சருமான பால்கர் சிங், பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட விசயம் கண்டிக்கத்தக்கது. அவர் மீது ஐபிசி-யின் 354, 354பி-யின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். இவ்விசயத்தில் பஞ்சாப் காவல் துறை இயக்குனர் அடுத்த 3 நாட்களில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று ேநாட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

The post வேலை கேட்டு வந்த பெண்ணிடம் அமைச்சர் பாலியல் தொல்லை: தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : National Commission for Women ,New Delhi ,Punjab ,Punjab State Aam Aadmi Party ,Minister ,MLA ,Balkar Singh ,
× RELATED சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்...