×

கடும் வறட்சியிலும் 31 லட்சம் லிட்டரை தாண்டியது ஆவின் பால் கொள்முதல்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சென்னை: கடும் வறட்சியிலும் 31 லட்சம் லிட்டரை தாண்டியது ஆவின் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் டிவிட்டர் பதிவில்:
முதல்வர் மு.க.ஸ்டாலின் கனிவான வழிகாட்டுதலில் கடும் வறட்சியிலும் 31 லட்சத்தை தாண்டியது ஆவின் பால் கொள்முதல்…. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு நன்றி.

கடுமையான நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் மூலம் ஆவின் ஒரு நிலையான வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை உருவாக்குவோம். முதல்வரின் தொலை நோக்கு பார்வையான வெண்மை புரட்சியை ஏற்படுத்துவோம். விவசாயிகள் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகள். என கூறப்பட்டுள்ளது.

The post கடும் வறட்சியிலும் 31 லட்சம் லிட்டரை தாண்டியது ஆவின் பால் கொள்முதல்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் appeared first on Dinakaran.

Tags : AVIN ,MINISTER ,MANO TANGARAJ ,Chennai ,Mano Thangaraj ,Tamil Nadu Dairy Producers and Co-operative Association ,Dinakaran ,
× RELATED இணையதள வாயிலாக ஆவின் பால் அட்டை பெற...