×

சென்னை வில்லிவாக்கத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: புகாரின் அடிப்படையில் 4 பேரிடம் விசாரணை

சென்னை: வில்லிவாக்கத்தில் 11 வயது சிறுமியை கடந்த 6 மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கத்தில் 11 வயது சிறுமியை 6 மாத காலமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தாய் மற்றும் தந்தை மதுபோதைக்கு அடிமையாகி சரிவர சிறுமியை பராமரிக்காத நிலையில் பாட்டி கவனிப்பில் வளர்ந்துள்ளார்.

11 வயது சிறுமியை உறவினர்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 5 க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால் சிறுமியிடம் பாட்டி விசாரித்த போது சிறுமி கூறிய தகவலை அடுத்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அப்பகுதியை சேர்ந்த 4 பேரிடம் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை மீட்ட போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

The post சென்னை வில்லிவாக்கத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: புகாரின் அடிப்படையில் 4 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Villivakam ,Villivakam, Chennai ,Dinakaran ,
× RELATED போலி ஆவணம் தயாரித்த வழக்கு: பாஜக மண்டல் தலைவர் கைது