×

மகளிர் குழு பொருட்கள் விற்கப்படும் கடைகளில் காதி கிராப்ட் பொருட்களையும் விற்பனை செய்ய வேண்டும்

*கலெக்டர் லட்சுமிபதி அறிவுறுத்தல்

தூத்துக்குடி : காதி கிராப்ட் பொருட்களை மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கடைகளில் சேர்த்து விற்பனை செய்ய வேண்டும் என கலெக்டர் லட்சுமிபதி கேட்டுக் கொண்டார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு கதர் கிராம வாரியம், காதி கிராம பொருள், பனை பொருட்கள் விற்பனையை அதிகரிப்பது தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமை வகித்து பேசியதாவது:

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய உற்பத்தி பொருட்களாக கதர் ரகங்கள், கிராமப் பொருட்கள் மற்றும் பனைவாரிய பொருட்களின் விற்பனையை அதிகரித்திடும் பொருட்டு புதிதாக பல்வேறு கதர் பொருட்களான கதர் ரகங்கள், கதர் பாலியஸ்டர் ரகங்கள், கதர் ரெடிமேட் ரகங்கள், கதர் போர்வை மற்றும் மெத்தை விரிப்புகள், கதர் துண்டு மற்றும் தலையணை உறைகள், கதர் பட்டு ரகங்கள், கதர் உல்லன் மற்றும் கம்பளி ரகங்கள், கிராமப் பொருட்களான தேன் பாட்டில், கம்யூட்டர் சாம்பிராணி, கப் சாம்பிராணி, ஊதுபத்தி (மல்லிகை, ரோஸ், சாண்டல்,

லாவண்டர், கஸ்தூரி), குமார் காம்போ சோப்புகள், பிராக்ரன்ஸ் காம்போ சோப்புகள், நறுமண குளியல் சோப்புகள், (லாவண்டர், ரோஸ்) (ரெட் சாண்டல், சாண்டல்), குறிஞ்சி சாண்டல் சோப்பு, டிடர்ஜெண்ட் சலவை சோப்பு, டிடர்ஜெண்ட் (திரவ சோப்பு), சாரல் ஷாம்பு, ஒண்டர் வாஷ் சலவை பவுடர், ஜவ்வாது, ஜவ்வாது ஸ்பிரே, கிப்ட் பேக் (ஊதுபத்தி, தீப்பெட்டி, ஜவ்வாது, பூஜா பவுடர், திரி, சூடம், நெய் விளக்கு), சூடம், சுகப்பிரியா வலி, நிவாரணி தைலம், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், கேழ்வரகு, தினை, மூங்கில் அரிசி மற்றும் பனை பொருட்களான கருப்பட்டி, பனங்கற்கண்டு சரல், பனங்கற்கண்டு சலங்கை, சுக்கு காபி தூள், பனங்கற்கண்டு சுக்கு காபி தூள், பனங்கிழங்கு மாவு, சுக்கு காபி பொடி (மிளகு, திப்பிலி, பனங்கற்கண்டு), கருப்புகட்டி காபி தூள், பாம் ஜீஸ், சுக்கு மிளகு திப்பிலி கற்கண்டு பால்மிக்ஸ் ஆகிய பொருட்கள் அனைத்தும் இங்கு காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டது.

மேலும் மகளிர் திட்டம் மூலம் காதி கிராப்ட் பொருட்களை மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கடைகளில் சேர்த்து விற்பனை செய்யுமாறும், அரசு அலுவலர்கள் கதர் பொருட்களை வாங்கி பயனடைய வேண்டும், என்றார்.கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post மகளிர் குழு பொருட்கள் விற்கப்படும் கடைகளில் காதி கிராப்ட் பொருட்களையும் விற்பனை செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Collector ,Lakshmipathy ,Thoothukudi ,District ,Tamil Nadu ,
× RELATED செங்கல்பட்டில் ஜமாபந்தி நிறைவு...