×

விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் சசிகலா!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சசிகலா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கள்ளச்சாராய விற்பனைக்கு காவல்துறை உடந்தை. ஒரு அதிகாரியை பணியிடைநீக்கம் செய்தால்தான் அடுத்து வரக்கூடியவர்கள் சரியாக பணி செய்வார்கள். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்யக்கூடாது.

குடும்பத்தாரிடம் உயிரிழந்தவர்களின் உடல்களை ஒப்படைக்க வேண்டும். கள்ளச்சாராய உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியவேண்டும். சம்பந்தப்பட்டவர்களை ஒருவாரத்திற்குள் கைது செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சியை சுற்றி குட்டி ராஜாக்கள் நிறைய பேர் உள்ளனர். அரசு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யக்கூடாது சஸ்பெண்ட் செய்ய வேண்டும். தமிழகத்தில் இனி இதுபோன்ற சம்பவம் நடக்கவே கூடாது என்று கூறியுள்ளார்.

 

The post விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் சசிகலா! appeared first on Dinakaran.

Tags : Sasikala ,Kallakurichi ,
× RELATED சொல்லிட்டாங்க…