×

சென்னை தேனாம்பேட்டையில் உணவு விடுதியில் பாஜக பிரமுகர் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார்: சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை

சென்னை: சென்னையில் உணவு விடுதியில் புகுந்து பணம் கேட்டு அடாவடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி உரிமையாளர் புகார் அளித்துள்ளார். தேனாம்பேட்டையில் முகேஷ் என்பவர் நடத்திவரும் உணவு விடுதிக்கு சென்ற ஹர்ஷித் என்பவர் வாடிக்கையாளர் ஒருவரை தாக்கியுள்ளார். இதனை தடுக்க முயன்ற விடுதி ஊழியர்களையும் தாக்கியதோடு உரிமையாளரை அழைத்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து உரிமையாளர் முகேஷ் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஹர்ஷித்தை பிடித்து போலீசாரிடம் விசாரணை நடத்தினர். பலமுறை உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துவரும் ஹர்ஷித் மற்றும் அவரது அடி ஆட்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

The post சென்னை தேனாம்பேட்டையில் உணவு விடுதியில் பாஜக பிரமுகர் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார்: சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : BJP ,Denampetta, Chennai ,Chennai ,Harshid ,Mukesh ,Tenampet ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி...