×

திருவள்ளூர் பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல்

திருவள்ளூர்: கோவில் திருவிழாவுக்கு பாஜக மாவட்ட தலைவரை அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மணவாள நகர் பட்டறை கோவில் திருவிழாவில் பாஜக மாவட்ட தலைவர் அஸ்வினை அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அஸ்வினை அழைத்த பாஜக நிர்வாகி செந்திலை வீடு புகுந்து கத்தியால் தாக்கிய 4 நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செந்தில் அளித்த புகாரின் பேரில் பாஜக நிர்வாகிகள் பன்னீர்செல்வம், கார்த்திக், பாலா, ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post திருவள்ளூர் பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,BJP ,BJP district ,president ,Ashwin ,Manawala Nagar workshop ,festival ,Tiruvallur ,
× RELATED கலெக்டரின் உத்தரவு காற்றில்...