×

மயிலாடுதுறையில் திடீர் பரபரப்பு உயர் அழுத்த கம்பியில் மின் கம்பம் சாய்ந்தது இரவு நேரம் என்பதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

 

மயிலாடுதுறை, மே 28: மயிலாடுதுறையில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு கம்பம் உயர் அழுத்த மின் கம்பியில் சாய்ந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மின் இணைப்பை சீரமைக்கும் பணியில் மின்சாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மையப்பகுதியில் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லக்கூடிய பிரதான சாலையான காந்திஜி சாலை இரு வழி பாதையாக பிரிக்கப்பட்டு டிவைடர்களுக்கிடையே மின்கம்ப விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. புனித சவேரியார் ஆலயத்தின் எதிரே இருந்த மின் விளக்கு திடீரென சாய்ந்து சாலையில் உள்ள உயர் அழுத்த மின் கம்பியில் விழுந்தது.

இதனால் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் அப்பகுதிகளில் போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில் உடனடியாக மின்சார வாரியத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின்விளக்குகள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் அதன் அடிப்பகுதி துருப்பிடித்து சாய்ந்து விழுந்தது தெரிய வந்தது. மின்கம்ப விளக்குகள், மின்கம்பங்களின் தரம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

The post மயிலாடுதுறையில் திடீர் பரபரப்பு உயர் அழுத்த கம்பியில் மின் கம்பம் சாய்ந்தது இரவு நேரம் என்பதால் அசம்பாவிதம் தவிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறையில் தனியார் பள்ளி மீது...