×

நாகப்பட்டினத்தில் தனியாருக்கு நிகரான வசதிகளுடன் மினி மல்டி ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனை நாகப்பட்டினத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு உணவகத்தை சுகாதாரமாக பராமரிக்க உத்தரவு

 

நாகப்பட்டினம், மே 28: நாகப்பட்டினம் தோணித்துறை ரோட்டில் உள்ள உணவகம் சுகாதாரமற்ற வகையில் பராமரிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் உத்தரவின்படி நேற்று அந்த உணவகத்தில் நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சமையலறை, உணவு பரிமாறும் இடம், கை கழுவும் இடம் மற்றும் பொருள் இருப்பு வைக்கும் இடம் ஆகியவை சுகாதாரமற்று இருந்தது.

உடனே இடம் சுத்தம் செய்யப்பட்டு, வெள்ளை அடிக்கப்பட்டு, உணவக உரிமம் புதுப்பிக்கப்பட்டு, அதன் விபர அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. ஓரிரு நாட்களில் உணவகம் தூய்மை செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று உரிமையாளர் உறுதியளித்தார். தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என அலுவலர்கள் தெரவித்தனர்.

The post நாகப்பட்டினத்தில் தனியாருக்கு நிகரான வசதிகளுடன் மினி மல்டி ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனை நாகப்பட்டினத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு உணவகத்தை சுகாதாரமாக பராமரிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Mini Multi Specialty Govt Hospital Nagapattinam ,Nagapattinam ,Food Safety Officers ,Dhonithura road ,Food Safety District ,Designated Officer ,Pushparaj ,Nagapattinam Municipality ,
× RELATED கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம்