×

வடசேரி பஸ் நிலையத்தில் நீர் கசிவு ஆறாக ஓடிய தண்ணீர்

 

நாகர்கோவில், மே 28 : நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் குளமாக இருந்த இடம் ஆகும். குளத்தை மண் போட்டு நிரப்பி தான் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் உள்ள ஆம்னி பஸ் நிலையமும் குளமாக இருந்த பகுதி ஆகும். பஸ் நிலையத்தையொட்டி உள்ள பகுதியில் தண்ணீர் நிரம்பும் போது, வடசேரி பஸ் நிலையத்திலும் நீரூற்று கிளம்புவது வழக்கமாக உள்ளது.

சமீபத்தில் பெய்த தொடர் மழையால் தற்போது நீருற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து, பஸ் நிலையத்தில் ஆறாக ஓடுகிறது. மழை குறைந்தாலும் நீருற்று இன்னும் குறையாததால் தண்ணீர் அதிகரித்துள்ளது. 2, 3 நாட்கள் வெயில் அடித்தால், பிரச்னை சரியாகி விடும் என அதிகாரிகள் கூறினர்.

The post வடசேரி பஸ் நிலையத்தில் நீர் கசிவு ஆறாக ஓடிய தண்ணீர் appeared first on Dinakaran.

Tags : Vadaseri bus station ,Nagercoil ,Nagercoil Vadasery ,omni bus station ,Dinakaran ,
× RELATED வணிக நிறுவனங்களில் குப்பை எடுக்க பணம்...