- தீமிதி திருவிழா
- அம்மையார்குப்பம்
- திருப்பதி அம்மன் கோவில்
- ஆர்.கே. பத்தா
- தீமிதி திருவிழா
- திருப்பதி
- அம்மன் கோயில்
- அம்மான்…
- திருப்பதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
ஆர்.கே.பேட்டை, மே 28: ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார்குப்பத்தில் திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாட்களாக நடைபெற்று வந்த விழாவில், திருக்கோயில் மற்றும் வீதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, மதியம் பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.
மாலை தீமிதி திருவிழாவையொட்டி காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மையார்குப்பம் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக ஆந்திரா பேருந்து நிலையம் வழியாக திருக்கோயில் வந்தடைந்தனர். இரவு 8 மணி அளவில் அக்னி குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் திரவுபதி அம்மன் எழுந்தருள, பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காவல் ஆய்வாளர் மலர், உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தீமிதி திருவிழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. முன்னதாக இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.சந்திரன் எம்எல்ஏ, ஆர்.கே.பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சி.என்.சண்முகம், ஒன்றிய குழு துணை தலைவர் திலகவதி ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆனந்தி செங்குட்டுவன், மோகன், மோனிஷா சரவணன், ராமசாமி, சித்ரா கணேசன், ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் உமாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post அம்மையார்குப்பத்தில் திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.