×

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 பேர் கைது

 

சோழிங்கநல்லூர், மே 28: திருவல்லிக்கேணி பகுதியில் ஐபிஎல் இறுதி போட்டிக்கான டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.42 லட்சம் மதிப்புள்ள டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் டி20க்கான இறுதி போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில், சன்ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இறுதி போட்டி என்பதால் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு புகார்கள் வந்தன. எனவே போலீசார் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் கண்காணித்தனர். அப்போது, கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்ததாக தனித்தனியாக 8 வழக்குகள் பதிவு செய்தனர்.

அதை தொடர்ந்து, கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகள் விற்ற பெரம்பூரை சேர்ந்த இம்தியாஸ் அகமது (43), ராயபுரத்தை சேர்ந்த ஜதின் (26), வேளச்சேரியை சேர்ந்த கார்த்திகேயன் (30), மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த நிலாத்ரி சேகர் மொண்டல் (22), கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சிவானந்த கவுடா (21), ஆந்திரா மாநிலம் திருப்பதியை சேர்ந்த வெங்கட்ராமன் (45), சித்தூரை சேர்ந்த பலகிரி சையது பாஷா (32), பல்லாவரத்தை சேர்ந்த பிரணாய் (18) ஆகிய 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,42,100 மதிப்புள்ள 36 ஐபிஎல் டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : IPL ,Chozhinganallur ,Tiruvallikeni ,Chennai Chepakkam ,MA Chidambaram Stadium ,Dinakaran ,
× RELATED கணுக்கால் அறுவை சிகிச்சை சக்சஸ்: ஷர்துல் தாகூர் `மகிழ்ச்சி’ பதிவு