×

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

 

ஓசூர், மே 28: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலூர் சொக்கரசனப்பள்ளி பகுதியில், பாகலூர் எஸ்ஐ ராஜசங்கிலிகருப்பன், பயிற்சி எஸ்ஐ கணேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தைலம்பள்ளம் அருகே பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆஞ்சனப்பா(38), முரளி(40), ரமேஷ்(31), ஹரீஷ்(31), கோவர்த்தன்(25) மற்றும் ராஜப்பா(24) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ₹10,490 ரொக்கம் மற்றும் 6 டூவீலர்கள், 6 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bagalur ,SI ,Rajasangiligaruppan ,Trainee SI Ganesh Kumar ,Bagalur Sokarasanapally ,Krishnagiri District ,Hosur ,Thailampallam ,Dinakaran ,
× RELATED பாகலூர் – ஒசூர் தாலூகா அலுவலக சாலையில்...