×

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

ஓசூர், அக்.18: ஓசூர் ஆர்வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்பு பிரசார முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு டிஎஸ்பி சிந்து தலைமை வகித்து பேசினார். அப்போது, கஞ்சா மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் ஷர்மிளாபானு, தலைமை ஆசிரியர் முனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனை பயன்படுத்துவதால் மன ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

The post போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Awareness ,Hosur ,RV Govt Boys ,Higher Secondary ,School ,Prohibition Enforcement Unit ,DSP ,Sindhu ,Dinakaran ,
× RELATED ஓசூர் அருகே சானமாவு காப்புக்காட்டில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்