- கரூர் மாரியம்மன் கோயில் தெரோட்டம் கரூர் சேகரிப்பாளர் அலுவலகம்
- கரூர்
- கரூர் கலெக்டர்
- கரூர்மாரியம்மன் கோயில் தெரோட்டம் கரூர் சேகரிப்பாளர் அலுவலகம்
- தின மலர்
கரூர், மே 28: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமையான நேற்று கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பொதுமக்கள், தங்கள் கோரிக்கை குறித்தான மனுக்களை பெட்டியில் போட்டுச் சென்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி கடந்த மார்ச் 16ம்தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜூன் 4ம்தேதி வரை தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இதையொட்டி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நாட்களில் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறாமல் உள்ளது.
இருப்பினும், வாரந்தோறும் திங்கள் கிழமை அன்று, பல்வேறு கோரிக்கைகளுடன் ஏரா ளமானோர் கலெக்டர் அலுவலகம் வந்து செல்கின்றனர். அவ்வாறு கோரி க்கை மனுக்களுடன் வரும் பொதுமக்கள், தங்கள் குறைகள் சம்பந்தமான மனுக்களை பெட்டியில் போட்டுச் செல்லும் வகையில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் அதற்கான பெட்டி வைக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கள்கிழமை (குறைதீர்க்கும் கூட்ட நாள்) என்பதால் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்களுடன் வந்த பொதுமக்களில் பலர், தங்களின் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டுச் சென்றனர்.
The post முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கரூர்மாரியம்மன் கோயில் தேரோட்டம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் appeared first on Dinakaran.