×

அரசு மகளிர் கல்லூரியில் இன்று சிறப்பு கலந்தாய்வு

 

காரிமங்கலம், மே 28: காரிமங்கலம் அரசு மகளிர் கலை கல்லூரியில், இன்று சிறப்பு ஒதுக்கீட்டில் இளங்கலை பட்ட படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பிஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.காம்., பிசிஏ., பிபிஏ., பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், பிஎஸ்சி., நியூட்ரிஷன் ஆகிய பாடப்பிரிவுகளில், மாணவிகள் சேர்க்கைக்கான சிறப்பு கவுன்சிலிங் நடக்கிறது. மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், தேசிய மாணவர் படை மாணவர்கள், அந்தமான் மற்றும் நிக்கோபாரை சேர்ந்த தமிழ் மாணவர்கள், கல்லூரியில் இன்று(28ம்தேதி) காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த சிறப்பு கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசு மகளிர் கல்லூரியில் இன்று சிறப்பு கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Govt Women's College ,Karimangalam ,Government Arts College for Women ,BA ,B.Com ,BCA ,BBA ,
× RELATED பல்நோக்கு சமுதாயகூடம் திறப்பு விழா