×

இன்று காலை 11 முதல் 3 மணி வரை கடற்கரை-எஸ்பி கோவில் வரை மின்சார ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

 

செங்கல்பட்டு, மே 28: இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 வரை கடற்கரை-சிங்கபெருமாள்கோவில் வரை மின்சார ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூர்-விழுப்புரம் இடையே செங்கல்பட்டு பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை (5 மணி நேரம்) ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 10.56, 11.40 மதியம் 12.40 மணிக்கு செங்கல்பட்டிற்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் சிங்கபெருமாள்கோவில் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், காலை 11.30, மதியம் 1, 1.45 மற்றும் 3.50 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள்கோவிலிருந்து இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இன்று காலை 11 முதல் 3 மணி வரை கடற்கரை-எஸ்பி கோவில் வரை மின்சார ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Beach-SP Temple ,Southern Railway ,Chengalpattu ,Beach-Singaperumalkoil ,Chennai Egmore-Villupuram ,
× RELATED தாம்பரம் – ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு