×

இந்துத்துவா பற்றி பேச அதிமுக விவாதத்திற்கு வரலாம் ஜெயலலிதா இருந்தால் முதல் ஆளாக ராமர் கோயிலுக்கு சென்றிருப்பார்: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு

சென்னை: இந்துத்துவா பற்றி பேச அதிமுக விவாதத்திற்கு வரலாம் ஜெயலலிதா இருந்தால் முதல் ஆளாக ராமர் கோயிலுக்கு சென்றிருப்பார் என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உயர் நிலை குழு கூட்டத்தில் பேசியுள்ளார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள பாஜ தேர்தல் அலுவலகத்தில் பாஜாவின் உயர் நிலை குழு கூட்டம், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் நிறைவு பெற்ற பின் நிருபர்களை சந்தித்த பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: பாஜ தனியாக அதிக எண்ணிக்கையுடன் ஆட்சி அமைக்கும். பாஜ தனித்து 370 இடங்களுடன் கூட்டணியுடன் 400 இடங்களை பெறும். தமிழகத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் பாஜ கூட்டணி வெற்றி பெறும். அரசியலில் நடிகர் பிரகாஷ்ராஜ் போதுமான அரசியல் அனுபவம் இல்லாதவர். மோடியை திட்டுவதை மட்டும் முழு நேர பணியாக செய்து வருகிறார்.

ஜெயலலிதா தீவிரமான இந்துத்துவவாதி. மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம் என சொல்ல எனக்கு உரிமை இல்லை, நான் மாட்டை சாமியாக பார்க்கிறேன். அதை வைத்து விவசாயம் செய்யக்கூடியவன் நான். மாட்டு இறைச்சியை பற்றி மகாத்மா காந்தி என்ன எழுதி இருக்கிறார் என்பதை ஈ விகேஎஸ்.இளங்கோவன் படிக்க வேண்டும். மாட்டு இறைச்சியை சமைத்துக் கொடுங்கள் என கேட்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை. ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா அதிமுக தொண்டர்களிடம் ரூ20 லட்சம் கையெழுத்து பெற்றார். ஜெயலலிதா இருந்திருந்தால் ராமர் கோயிலுக்கு முதல் ஆளாக சென்று இருப்பார். இந்துத்துவா என்பது விரோத வார்த்தை அல்ல. இந்துத்துவாவை பற்றியும் ஜெயலலிதாவை பற்றியும் அதிமுக விவாதத்திற்கு தாராளமாக வரலாம். நாம் தமிழர் கட்சியை விட பாஜ அதிக வாக்கு வாங்கி விட்டால் கட்சியை கலைக்கிறேன் என சொல்கிறார் சீமான். நீங்கள் கட்சியெல்லாம் கலைக்க வேண்டாம். தமிழகத்தில் சீமான் குரல் ஒலிக்க வேண்டும் என பேசினார்.

 

The post இந்துத்துவா பற்றி பேச அதிமுக விவாதத்திற்கு வரலாம் ஜெயலலிதா இருந்தால் முதல் ஆளாக ராமர் கோயிலுக்கு சென்றிருப்பார்: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Jayalalitha ,Ram temple ,BJP ,president ,Annamalai ,CHENNAI ,Jayalalithaa ,Nadakara, Chennai ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…