×

தாய்ப்பாலை விற்க கூடாது: ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

புதுடெல்லி: தாய்ப்பாலை பதப்படுத்தவோ அல்லது விற்கவோ அங்கீகாரம் அளிக்கவில்லை என மாநில அரசுகளுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 விதிகளின் கீழ் தாய்ப்பாலை பதப்படுத்துதல் அல்லது விற்பனை செய்ய அனுமதியில்லை. எனவே, தாய்ப்பால் மற்றும் அதுதொடர்புடைய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

விதிகளை மீறிவிற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தாய்ப்பாலை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள உணவு வணிகங்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் உரிமம் வழங்கக்கூடாது. இதனை ஒன்றிய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். பொதுச் சுகாதார பாலூட்டும் மையங்கள் அளித்துள்ள வழிகாட்டுதல்களின்படி, தாய்ப்பாலை எந்தவொரு வணிக நோக்கத்துக்கும் பயன்படுத்த முடியாது. சிசுக்களுக்கு மட்டுமே தாய்ப்பாலை வழங்கப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தாய்ப்பாலை விற்க கூடாது: ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : EU ,New Delhi ,Food Safety and Quality Commission of India ,Dinakaran ,
× RELATED லஞ்சம் வாங்கி கொண்டு வினாத்தாள் கசிவு,...