×

முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பிற்கு தேசிய கொடியை போற்றி மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய முன்னாள் ராணுவ வீரர்கள்

கிருஷ்ணகிரி: 1971ம் பாகிஸ்தான் போரில் பணிபுரிந்த முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பிற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் தேசிய கொடியை போற்றி மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி சம்பவம் இப்பகுதி பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் 75. இவர் இந்திய ராணுவத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துள்ளார். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கு பெற்றவர். இவர் பணி ஓய்வு பெற்று இவர் அவரது சொந்த ஊரான குருபரப்பள்ளி அடுத்த விநாயகபுரம் கிராமத்தில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக நேற்று நாகராஜ் உயிரிழந்தார்.

இதையடுத்து இதே கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து இறந்த இராணுவ வீரருக்கு மலர் வளையம் மற்றும் தேசியகொடியை ஊர்வலமாக கொண்டு வந்து இறந்த ராணுவ வீரரின் உடலில் மேல் போர்த்தி மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தி தங்களுடைய கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேலும் முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கினர். தன்னுடன் பணியாற்றிய இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தற்காக இவருடன் பணியாற்றிய முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் நண்பர்கள் இந்திய தேசியக் கொடியை போற்றி மரியாதை செலுத்திய சம்பவம் சுற்றுவட்டார பகுதி கிராமங்களிலும் பொதுமக்களையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து அவரது உடல் இன்று மாலை சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

The post முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பிற்கு தேசிய கொடியை போற்றி மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய முன்னாள் ராணுவ வீரர்கள் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Pakistan war ,Krishnagiri district ,Kuruparapalli ,
× RELATED மாவட்டத்தில் நடப்பாண்டு 2.19 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடநூல் விநியோகம்